டாப் 10 செய்திகள் : சமூக நீதி போராளிகளின் மணிமண்டபம் திறப்பு முதல் 100வது ராக்கெட் கவுண்டவுன் வரை!

Published On:

| By Kavi

விழுப்புரத்தில் ஸ்டாலின்!

கள ஆய்விற்காக இரு நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 28), இட ஒதுக்கீடு  போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளின் மணிமண்டப திறப்பு விழா மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 

டிரம்புக்கு மோடி வாழ்த்து!

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, உலக அமைதி, வளம். பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றுவோம் என்று  மோடி கூறியுள்ளார்.

சாரணா் இயக்க வைர விழா!

‘அதிகாரம் பெற்ற இளைஞா்கள் — வளா்ந்த இந்தியா’ என்ற கருப்பொருளை கொண்டு பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி மற்றும் வைர விழா திருச்சியில் நடைபெறுகிறது. இவ்விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையே போட்டி!

இந்தியா – இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று (ஜனவரி 28) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இஸ்ரோவின் 100வது ராக்கெட்! 

இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் செலுத்தப்படுவதையொட்டி இன்று காலை கவுண்டவுன் தொடங்கப்பட உள்ளது.

பனி மூட்டம்!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Top Ten News in Tamil January 28 2025

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

47 ஆயிரம் பணிகளுக்கு அரசாணை!

பள்ளிக்கல்வித்துறையில் 47 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு!

தமிழ்நாட்டில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 மீனவர்கள் கைது!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே 33 மீனவர்கள் கைதாகியுள்ள நிலையில் மீண்டும் இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share