டாப் 10 செய்திகள் : காஸாவில் போர் நிறுத்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!

Published On:

| By Kavi

போர் நிறுத்தம்!

காஸாவில் போரை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இன்று (ஜனவரி 19) காலை இந்திய நேரப்படி 8.30 மணி முதல் அமலுக்கு வருகிறது.

மஞ்சள் அலர்ட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் மழை!

சென்னையில் நேற்று இரவு சாரல் மழை ஆங்காங்கே பெய்த நிலையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும்  பெய்தது.

மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாடுவார். அந்த வகையில் இந்த மாதம் கடைசி ஞாயிறு அன்று குடியரசு தினம் வருவதால் மனதின் குரல் நிகழ்ச்சி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இன்று ஒளிபரப்பப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள்!

பொங்கல் விடுமுறை, வார விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவர்களின் வசதிக்காக இன்று 4,302 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் 42 காசுகள் உயர்ந்து ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விடாமுயற்சி அப்டேட்!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘பத்திக்கிச்சு’ பாடல் இன்று காலை 10:45 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தேதி நீட்டிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

மலர்க் கண்காட்சி!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

55 வேட்புமனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பாட்டுடன் ஜூஸ் குடிப்பது நல்லதா?

’ஆர்.என். ரவியை மாத்திடாதீங்க’ : அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்

பெரியார் அவதூறு: சீமானுக்கு சம்மன்!

டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் செய்த திடீர் மாற்றம்!

பிக்பாஸ் தமிழ் 8 நாளை இறுதி சுற்று : 50 லட்சத்தை வெல்ல போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share