திமுக சட்டத்துறை மாநாடு!
திமுக சட்டத்துறையின் மூன்றாம் மாநில மாநாடு இன்று(ஜனவரி 18) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் தீர்ப்பு!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சொத்து அட்டைகள் வழங்கும் மோடி
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு இன்று பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்குகிறார்.
பொங்கல் பரிசு பெற கடைசி நாள்!
பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்கள் இன்றுக்குள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மழை அப்டேட்!
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடலில் அடுத்த மாதம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலூன் திருவிழா!
மதுரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் 2 நாள் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் 42 காசுகள் உயர்ந்து ரூ.92.81-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சைக்கு விடுமுறை!
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜா் ஆராதனை விழாவையொட்டி, இன்று உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் அடுத்த ரேஸ்
போர்ச்சுகலில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் நடிகர் அஜித்குமார் ரேசிங்’ குழு கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை சங்கமம் நிகழ்வில் சம்பவம் : மேடையேறி சென்று பாராட்டிய ஸ்டாலின்
கோவை விமான நிலையம் படைத்த புதிய சாதனை!
சென்னை ரிட்டர்ன்ஸ் பரிதாபங்கள் : அப்டேட் குமாரு!
‘சீனா முழுவதும் நாறுகிறது’- பாகிஸ்தான் டாக்டர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!