டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

முதல்வர் ஆலோசனை!

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

எடப்பாடி பிரச்சாரம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

பாஜக ஆர்ப்பாட்டம்!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புத்தக திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகவை சங்கமம் புத்தக திருவிழா இன்று துவங்குகிறது.

தை உத்தர வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தை உத்தர வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 264-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று ஷாம்ஜெட்பூர், ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குட்கா தடை ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு!

இரட்டைக் கன்றுகளை ஈன்ற நாட்டுப் பசு: அரியலூரில் அரிய நிகழ்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share