டெல்லி சட்டமன்ற தேர்தல்!
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 60.54 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. top ten news in tamil
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 67.97 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
பட்ஜெட் கண்டன பொதுக்கூட்டம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆவடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. சென்னை பூக்கடை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
காரைக்கால் உள்ளூர் விடுமுறை!
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவதை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து மோதல்!
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று முதல் நடைபெறுகிறது. லாகூரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
திறனாய்வு தேர்வு!
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாக்கள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், டீசல் ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. top ten news in tamil