டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
டெல்டாவில் மத்திய குழு
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களையும், நெல் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்ய மத்திய குழு இன்று (பிப்ரவரி 8) தமிழகம் வருகிறது.
டெல்லி மேயர் தேர்தல்
டெல்லி மேயர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுமைப் பெண்
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
புது டிவிஷன் பெஞ்ச்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள், டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இன்று முதல் செயல்படவுள்ளது.
ஆ.ராசாவிற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்
காமராஜர் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு எதிராகப் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வானிலை நிலவரம்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் இன்று 263வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
துணிவு ஆல்பம்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் முழு ஆல்பம் இன்று வெளியாகவுள்ளது.
வாத்தி டிரெய்லர்
தனுஷ் மற்றும் சம்யுத்தா நடித்துள்ள வாத்தி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
தேசிய டேபிள் டென்னிஸ்
யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.
அதானிக்கு எதிராக செய்தி வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
ChatGPT- க்கு போட்டியாக களமிறங்கிய கூகுள்!