ஆளுநர் ரவி வழக்கு!
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி காலதாமதம் செய்வதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 6) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. top ten news in tamil
ஸ்டாலின் நெல்லை விசிட்!
இரண்டு நாள் கள ஆய்வுக்காக நெல்லை செல்லும் முதல்வர் ஸ்டாலின், கங்கை கொண்டானில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா சோலார் தொழிற்சாலையை இன்று துவக்கி வைக்கிறார்.
திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்ப பெற வலியிறுத்தி, திமுக மாணவரணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
டெல்லி தேர்தல் வாக்கு சதவிகிதம்!
டெல்லியில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 60.42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு வாக்கு சதவிகிதம்!
நேற்று நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.97 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ்!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.84-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டாஸ்மாக் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து மோதல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. top ten news in tamil