டெல்லி சட்டமன்ற தேர்தல்!
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. top ten news in tamil
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.
போக்குவரத்து மாற்றம்!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபக்கம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யு டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையாலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹங்கேரி, ஆஸ்திரியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஹங்கேரி, ஆஸ்திரியா அணிகள் மோதுகின்றன.
‘2கே லவ் ஸ்டோரி’ பாடல் ரிலீஸ்!
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் நான்காவது பாடலான ‘எதுவரை உலகமோ’ பாடல் இன்று வெளியாகிறது.
ஓலா நிறுவனத்தின் புதிய பைக்!
ஓலா நிறுவனத்தின் Roadster X Electric Bike இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.74,999 ஆகும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள்!
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். top ten news in tamil