44 புதிய மருத்துவமனைகளுக்கு அடிக்கல்!
ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்ரவரி 28) அடிக்கல் நாட்டுகிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.
விசிக ஆர்ப்பாட்டம்!
சென்னையில் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்பட கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இதனை நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்.
மின் – ஆதார் இணைப்பு!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
பிரதமர் மோடி உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லி சென்றுள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
எட்டாம் நாளில் தமிழை தேடி பரப்புரை பயணம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மதுரையில் நடைபெறும் எட்டாம் நாள் தமிழை தேடி பரப்புரையில் கலந்து கொள்கிறார்.
வானிலை அப்டேட்!
இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 283வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு!
அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது
சென்னை மாமன்ற கூட்டம்!
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெறுகிறது.
தேர்வுக்கு நோ டென்ஷன்: மாணவர்கள் முதல்ல இத படிங்க!
ஈரோடு கிழக்கு: 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு!