டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பிரதமரின் மனதின் குரல் !
மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (பிப்ரவரி 26) பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
ராகுல் உரை!
ராய்ப்பூரில் நடந்து வரும் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு மாநாட்டில் நேற்று சோனியா காந்தி உரையாற்றிய நிலையில் இன்று ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
திமுக செயற்குழு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சி நிா்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
சென்னை – புதுச்சேரி சரக்கு கப்பல் போக்குவரத்து!
புதுச்சேரி-சென்னை இடையே வாரத்தில் 2 நாட்கள் சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
தேஜஸ் ரயில்!
சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று செல்லும்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 281வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கண்ணை நம்பாதே ட்ரெய்லர்!
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி!
இன்று நடக்கும் 8ஆவது பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐஎஸ்எல் கால்பந்து
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
“அண்ணன் ஓபிஎஸ் தாயார் மறைவு வருத்தமளிக்கிறது”: ஈபிஎஸ்
கிரிப்டோ கரன்சி: ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் இந்தியா