Top ten news in tamil February 25 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வர் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

பிரச்சாரத்திற்கு இறுதி நாள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

ஓபிஎஸ் தாயாரின் இறுதி ஊர்வலம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் நேற்று இரவு வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா வரும் ஜெர்மனி பிரதமர்

2 நாள் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இன்று இந்தியா வருகிறார்.

குரூப் 2 முதன்மை தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. 55,071 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தேசிய அறிவியல் தினம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா நடைபெறவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று 280வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் எடிகே மோகன் பாகன் மற்றும் கிழக்கு வங்காளம் அணிகள் மோதவிருக்கின்றன.

மகளிர் டி20 உலகக் கோப்பை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: காளான் ஸ்டஃப் பார்பிக்யு!

இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சர்வே ரிப்போர்ட்!

ட்விட்டரில் ட்ரெண்டான மாரடைப்பு ஹேஷ்டாக்: காரணம் இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0