உத்தவ் தாக்கரே வழக்கு!
சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
மதுராந்தகத்தில் தமிழைத் தேடி நிகழ்ச்சி!
12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கியுள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 22) மதுராந்தகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
முதல்வரின் திருவாரூர் பயணம்!
2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் மன்னார்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து இன்று நடத்தி வைக்கிறார். அதுபோன்று காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்கிறார்.
திருப்பதி டிக்கெட்!
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று அடுத்த 3 மாதங்களுக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்படவுள்ளது.
ஓடிடியில் வாரிசு!
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 277வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு!
நேற்று தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம், ஆளுநருடனான சந்திப்பை நடத்திய அண்ணாமலை இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக பாஜக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சர்கள் கூட்டம்!
இன்று முதல் 25 ஆம் தேதி வரை ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டங்கள் பெங்களூரில் நடைபெற உள்ளன.
டெல்லி மேயர் தேர்தல்!
டெல்லி மேயர், துணை மேயர், மாநகராட்சி நிலைக்குழுவின் 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
வானிலை அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!