டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

முதல்வர் ஸ்டாலின் பயணம்!

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 21) திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார்.

ராமதாஸ் பரப்புரை!

சென்னை முதல் மதுரை வரை தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று துவங்குகிறார்.

பாஜக உண்ணாவிரத போராட்டம்!

திமுக நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை பேரணி நடைபெற உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கொடியேற்றும் விழா!

மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்!

திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் இன்று நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்கள் கிரிக்கெட் போட்டி!

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

நெட் தேர்வு!

பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கான நெட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசர கால கடன் உத்தரவாத திட்டம்!

அவசர கால கடன் உத்தரவாத திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று வங்கி துறை தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 276-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் வந்த எய்ம்ஸ் செங்கல்: பாஜகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி

புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள்: ஆந்திராவில் பரபரப்பு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.