ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை!
சென்னையில் இன்று (பிப்ரவரி 20) தனியார் ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மயில்சாமி இறுதிச்சடங்கு!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு வடபழனி சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
காங்கிரஸ் பேரணி!
ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தின் முகப்பில் காங்கிரஸ் சார்பில் கண்டன பதாகைகள் தாங்கி மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வானொலி நாடக விழா!
அகில இந்திய வானொலி நிலையம் நடத்தும் நாடக விழா இன்று வானொலி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
வீரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஏஆர்கே சரவண் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் வீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு!
அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் இன்று முதல் விசாரணை நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 275-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
பெண்கள் உலக கோப்பை!
பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நாங்கள் பெரியாரின் பேரன்: பிரச்சாரத்தில் கமல்
திமுக அரசை கண்டித்து அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!