அண்ணாமலை பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பூத் சிலிப் விநியோகம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் நாயக்கம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
கமல்ஹாசன் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நலத்திட்ட உதவிகள் விழா!
புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
ஈழம் அரசியலும் தீர்வும் கருத்தரங்கு!
மே 17 இயக்கம் சார்பில் ஈழம் அரசியலும் தீர்வும் கருத்தரங்கம் இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற உள்ளது.
மயான கொள்ளை திருவிழா!
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு 21 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வீரன் படம் அப்டேட்!
ஏஆர்கே சரவண் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் வீரன் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 274-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெண்கள் கிரிக்கெட் போட்டி!
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன.
காதலை நிராகரித்ததால் சிறுமி மீது ஆசிட் வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு!
“திருடனுக்கு பாடம் புகட்டுவோம்” – உத்தவ் தாக்கரே சூளுரை!