டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

திரவுபதி முர்மு தமிழகம் வருகை!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (பிப்ரவரி 18) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். பின்னர் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்கிறார்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரி விடுமுறை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி, திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சின்னம் பொருத்தும் பணி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று சின்னம் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

சிவிங்கிப்புலிகள் இந்தியா வருகை!

தென் ஆப்பிரிக்காவிலிருந்து‌ 12 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு இன்று வருகை தர உள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டம்!

சென்னை நங்கநல்லூரில் பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி!

8 மாநில திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டி இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 273-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி!

இன்றைய பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா : தேர்தல் ஆணையம்

ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *