டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அதானி வழக்கு!

ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்து விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 17) விசாரணைக்கு வருகிறது.

வாத்தி ரிலீஸ்!

வெங்கி அட்லுரு இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை கிண்டியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஷாஜஹான் நினைவு தினம்!

ஷாஜஹான் 368-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 18 வரை தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் முதல் பாடல் வெளியீடு!

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

விசைத்தறி தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கூலி உயர்வு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

கார்னிவல் நிகழ்ச்சி!

பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற கார்னிவல் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 272-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெயர் பட்டியல் வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண்களுடன் கூடிய பெயர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

ராணுவ வீரர் கொலை : கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

நானியுடன் டான்ஸ் ஆடிய சந்தோஷ் நாராயணன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *