ஜவுளி கண்காட்சி!
டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் 2025 உலகளாவிய ஜவுளி கண்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 16) பங்கேற்கிறார். top ten news in tamil
திமுக ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமநாதபுரத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக மாநாடு!
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெறும் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
கூட்டநெரிசலில் பலி!
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு கூட்டநெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கிரிக்கெட் போட்டி!
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பரிசு வழங்குகிறார்.
ஜிம்பாப்வே, அயர்லாந்து மோதல்!
ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
டீசல் இரண்டாவது பாடல் ரிலீஸ்!
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அனன்யா உள்ளிட்டோர் நடித்துள்ள டீசல் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாக்கள் உயர்ந்து பெட்ரோல் ரூ.100.90-க்கும் டீசல் ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
ஓமன், நமீபியா மோதல்!
ஓமன், நமீபியா அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஓமனில் உள்ள அல் அம்ரட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. top ten news in tamil