திரிபுரா தேர்தல்!
திரிபுரா மாநிலத்தில் இன்று (பிப்ரவரி 16) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேசிய பழங்குடியின திருவிழா!
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தேசிய பழங்குடியின திருவிழாவை துவக்கி வைக்கிறார்.
கனிமொழி பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வழக்கு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமான முறையில் நடத்தக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பாஜக ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
லைகா அப்டேட்!
லைகா நிறுவனம் இன்று புதிய படம் குறித்த அப்டேட் வெளியிடுகிறது.
வாணியாறு நீர் திறப்பு!
தர்மபுரி மாவட்டம் வாணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு!
மார்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 271-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி!
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை இன்று முதல் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது.
80 வயதிலும் காதல்… மேடையில் போட்டுடைத்த பாரதிராஜா
குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!