வருமான வரி சோதனை
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இன்று (பிப்ரவரி 15) 2வது நாளாகத் தொடர்கிறது.
கள ஆய்வில் முதல்வர்
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.
கடைசி நாள்
மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி தேதி.
சிபிஎஸ்சி பொதுத் தேர்வு
10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று 270-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று பெங்களூரு மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
மகளிர் டி20 உலகக் கோப்பை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன.
சத்தியவாணி முத்து பிறந்தநாள்
திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சத்தியவாணி முத்துவிற்கு இன்று 100வது பிறந்தநாள்.
கொரோனாவை விடவும் கொடிய உயிர்பலி வாங்கும் மார்பர்க் வைரஸ் : ஐ.நா எச்சரிக்கை!
பழ. நெடுமாறன் கூற்றை, வசூல் வேட்டையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு விடுவார்களோ? பதறும் தமிழர்கள்!