ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம்!
மூன்றாவது நாளாக இன்று (பிப்ரவரி 14) கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை!
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது.
அபுதாபியில் இந்து கோயில் திறப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கிறார்.
இடைநிலை ஆசிரியர் தேர்வு!
1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சோனியா காந்தி வேட்பு மனு!
ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வேதாந்தா மனு!
ஸ்டொ்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடா்பான வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்!
கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முன்பாக கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம் இன்று தொடங்குகிறது.
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்!
44 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 634வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
வானிலை அப்டேட்!
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் உரையில ஆளுநர் தேவையா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி ராஜினாமா செய்தது ஏன்? புழல் சிறைக்குள் நடந்தது என்ன?
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஒரு மகன் போனாலும் ஆயிரம் மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் : சைதை துரைசாமி உருக்கம்!