டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

விமான கண்காட்சி!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) துவக்கி வைக்கிறார்.

எடப்பாடி வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை அரசாணையில் வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

இன்று ராஜேஷ் பிண்டல் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய இரண்டு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்கின்றனர்.

உலக அரசு உச்சி மாநாடு !

20 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் பங்கேற்கும் உலக அரசு உச்சி மாநாடு துபாயில் இன்று துவங்குகிறது

முப்பெரும் விழா!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் 12-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருப்பூரில் இன்று முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

ராமேஸ்வரம் மாசி சிவராத்திரி விழா!

ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி மூன்றாம் நாளான இன்று ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மகளிர் ஐபிஎல் ஏலம்!

மகளிர் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 268-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சுகாதார அலுவலர் தேர்வு!

சென்னையில் இன்று சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரமா? : எடப்பாடி பதில்!

டாடா – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கதை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *