மும்பை – டெல்லி சாலை!
ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மும்பை – டெல்லி சாலையின் 250 கி.மீ தொலைவிலான முதல் பகுதியை போக்குவரத்து பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 12) திறந்து வைக்கிறார்.
நீலம் புத்தக நிலையம்!
சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட புத்தக நிலையத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று திறந்து வைக்கிறார்.
நாம் தமிழர் நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் 2000 முஸ்லிம்கள் இணையும் விழா நடைபெறுகிறது.
ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
கிஸ்கா பாய் கிஸ்கி ஜான் முதல் பாடல்!
பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடித்த கிஸ்கா பாய் கிஸ்கி ஜான் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 267-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நந்தீஸ்வரர் பிரதிஷ்டை விழா!
சேலம் வலசையூரில் 70 டன் நந்தீஸ்வரருக்கு இன்று பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது.
மாரத்தான் போட்டி!
பொதுப்போக்குவரத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தமிழகம் முழுவதும் இன்று 22 இடங்களில் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
தென் ஆப்பிரிக்கா கேப்டவுன் நகரில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவறான சிகிச்சை : இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு
அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா