டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பாராட்டு சான்றிதழ்!

குடியரசு தின விழா 2023 அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 11) வழங்குகிறார்.

தமிழ்நாடு வீரக்கலை போட்டி!

சென்னை பூந்தமல்லியில் இன்று நடைபெறும் 25-வது தமிழ்நாடு வீரக்கலைப் போட்டி நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றுகிறார்.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய குழாயில் பழுது ஏற்பட்டு சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் இன்று கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை குறைதீர்ப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்டவற்றிற்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஜி-20 கூட்டம்!

மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் ஜி-20 அதிகாரமளித்தல் குழுவின் முதலாவது கூட்டம் ஆக்ராவில் இன்று தொடங்குகிறது.

ருத்ரன் பாடல் வெளியீடு!

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் பாடாத பாட்டெல்லாம் என்ற முதல் பாடல் இன்று வெளியாகிறது.

200-வது நாள் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தும் 200-வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று கலந்து கொள்கிறார்.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 266-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இன்று காலை 11 முதல் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

லியோ படக்குழுவினரின் வைரல் புகைப்படம்!

ஒரு படி முன்னே…ஒரு படி வலிமையாக: ரிஷப் பண்ட் கொடுத்த அடுத்த அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *