வந்தே பாரத் ரயில்கள்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (பிப்ரவரி 10) இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
புகைப்பட கண்காட்சி!
சென்னையில் இன்று பத்திரிகை புகைப்பட கலைஞர்களின் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இறுதி வேட்பாளர் பட்டியல்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
அதானி வழக்கு!
அதானி குழுமத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
SSLV D2 ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து SSLV D2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
பிச்சைக்காரன் 2 அப்டேட்!
விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் இன்று வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி விடுமுறை!
புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டாடா படம் வெளியீடு!
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிக்கும் டாடா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 265-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சபரிமலை கோயில் : பிப் 12ல் நடை திறப்பு!
குடிபோதையில் கல்வீச்சு தாக்குதல் : ஆயுதப்படை காவலர் மரணம்