டாப் 10 செய்திகள் : பள்ளிகள் திறப்பு முதல் மலர் கண்காட்சி வரை!

Published On:

| By Kavi

பள்ளிகள் திறப்பு!

அரையாண்டு விடுமுறை முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஜனவரி 2) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

மலர் கண்காட்சி! 

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வரும் ஜனவரி 18ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மலர் கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 

புத்தகத்தை வெளியிடும் மத்திய அமைச்சர்கள்!

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா , மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் இன்று வெளியிடவுள்ளனர்.

இன்றே கடைசித் தேதி!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே கடைசித் தேதி ஆகும்.

மின்சார ரயில்கள் நேரம் மாற்றம்!

சென்னையில் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை ஜனவரி 2ஆம் தேதியான இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி – கடற்கரை என அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

சௌமியா அன்புமணி தலைமையில் அர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலை கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தளபதி 69 அப்டேட்?

தளபதி 69 மற்றும் டாக்ஸிக்’ படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம், “ஜனவரி 2ஆம் தேதியை குறித்துகொள்ளுங்கள்” என்று அறிவித்திருக்கும் நிலையில், விஜய்யின் தளபதி 69 படம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்!

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெஸ்ட் போட்டி!

ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: பெயருக்குக் கூட மதிப்பில்லையா? கூட்டணிக்குள் ‘குமரி’ புகைச்சல்! ஸ்டாலின் வைக்கும் ட்விஸ்ட்!

புத்தாண்டில் பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்!

அனைத்து பயனர்களுக்கும் ‘வாட்ஸ்அப் பே’ வசதி!

புத்தாண்டு : கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share