வங்கதேசத்தில் இடைக்கால அரசு!
வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று (ஆகஸ்ட் 8) இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது. நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்க உள்ளதாக ராணுவத் தலைமை தளபதி அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு நடைபெற உள்ளது. அப்போது செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இல்லையென்றால் காணொளி காட்சி மூலமாகவும் குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்று எச்சரித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்!
பாரிஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம், கோல்ஃப், மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்காக ஸ்பெயின் அணியை இன்று எதிர்கொள்கிறது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா!
மக்களவையில் இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா வக்ஃப் வாரியத்தில் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
வினேஷ் போகத் மேல்முறையீடு
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ பிரிவில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை அப்டேட்!
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வினேஷ் போகத் ஓய்வு!
மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 144-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தல்!
9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், இதற்கு செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பூனைகள் தினம்!
பூனைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 சர்வதேச பூனை தினம் கொண்டாடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காளான் மலபாரி!
இதுக்கு தகுதி நீக்கம் பண்ணுவாங்கலா?: அப்டேட் குமாரு
”அதே மோசமான பட்ஜெட்” : மக்களவையில் மஹூவா மொய்த்ரா ஆவேசம்!
இந்தியா தோல்வி… 27 ஆண்டுக்கு பிறகு மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!