இந்தியா கூட்டணி கூட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்றும் (ஆகஸ்ட் 31) நாளையும் இந்தியா கூட்டணி மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.
ஓபிஎஸ் வழக்கு!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2012-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்!
பள்ளிகளில் நடைபெறும் சாதிய மோதல்களை தடுப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா நூலகத்தில் இன்று முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்டார் ப்ரோமோ ரிலீஸ்!
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகிறது.
உலக கோப்பை டிக்கெட் விற்பனை!
அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.
ஆசிய ஜவுளி மாநாடு!
கோவையில் இன்றும் நாளையும் ஆசிய ஜவுளி மாநாடு நடைபெற உள்ளது.
விநாயகர் சிலை வழக்கு!
ரசாயனம் கலந்த விநாகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடை விதிக்கக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வங்கதேசம், இலங்கை மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 464-வது நாளாக பெட்ரோல். டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: மட்டன் மசாலா வடை!
பேருந்துகளில் குடை பிடித்து பயணம் : அமைச்சர் முக்கிய உத்தரவு!
தலைமைச் செயலகத்தை மாற்றுங்கள்: முதல்வருக்கு கோரிக்கை!