top ten news in tamil august 29

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காவிரி மேலாண்மை கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணைய 23-ஆவது கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற உள்ளது.

திமுக இளைஞரணி கூட்டம்!

கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

மார்க் ஆண்டனி பாடல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது.

மணிமுத்தாறு அணையில் குளிக்க தடை!

திருநெல்வேலி மணிமுத்தாறு அணையில் அருவி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை விடுமுறை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலை!

சென்னையில் இன்று 463-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வண்டலூர் பூங்கா செயல்படும்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமையா வஸ்தாவய்யா பாடல் ரிலீஸ்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ராமய்யா வஸ்தாவையா பாடல் இன்று வெளியாகிறது.

வேளாண் படிப்பு கலந்தாய்வு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் மூன்றாம் கட்ட நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு!

கிச்சன் கீர்த்தனா: ஜிஞ்சர் சிக்கன் மசாலா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0