டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
SLIM விண்கலம்!
ஜப்பானின் SLIM விண்கலம் நிலவில் இன்று (ஆகஸ்ட் 28) தரையிறங்குகிறது.
செந்தில் பாலாஜி ஆஜர்!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்!
பெரம்பலூரில் இன்று பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது .
கவின் புதிய படம்!
இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.
மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்!
மயிலாடுதுறை – சேலம் இடையே மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
அரசு பணி பயிற்சி வகுப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பணிகள் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி இன்று முதல் துவங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 462-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா வெற்றி!
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிழக்கு ஆப்பிரிக்கா கோப்பை!
கிழக்கு ஆப்பிரிக்கா கோப்பை டி20 போட்டியில் இன்று உகாண்டா, ரவாண்டா அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு ஃபிஷ் ஃப்ரை
பாமக பொதுக்கூட்டம் : அனுமதி மறுப்பு!