கொல்கத்தாவில் பாஜக பந்த்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடி நடத்தினர். இதை கண்டித்தும் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யக் கோரியும் மேற்கு வங்கம் முழுவதும் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 28) பந்த் நடத்தப்படுகிறது.
அமெரிக்கா புறப்பட்ட ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் , “இந்த பயணத்துக்கு பின் அமைச்சரவை மாற்றமா என்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது” என்று கூறினார்
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் கூடுதலாக சாட்சிகளை விசாரிக்க கோரி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்படவுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தய வழக்கு!
சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரிக்கிறது.
பாராலிம்பிக் போட்டி!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் 17 ஆவது பாராலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், கடலில் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மழை அப்டேட்!
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதியப் பேச்சுவார்த்தையை முடிப்பதிலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலும் ஏற்பட்ட காலதாமதத்தை கண்டித்து 18 ஆயிரம் துறைமுக தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 164-வது நாளாக இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும். டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் பிக்கிள்!
புறப்பட்டார் ஸ்டாலின்… இதுவரை அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதல்வர்கள் பத்தி தெரிஞ்சுக்கங்க!
அமெரிக்கா பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் ‘நச்’ பதில்!
மூன்று ஆண்டுகளில் 808 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… அமெரிக்கா செல்லும் முன் ஸ்டாலின் பேட்டி!