முத்தமிழ் முருகன் மாநாடு
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 24) சென்னையில் இருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இருநாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக இந்து சமய அறநிலையத் துறை பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படவுள்ளது.
கலைஞர் எனும் தாய்
முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அமைச்சர் எ.வ.வேலு எழுதியிருக்கும் `கலைஞர் எனும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
அதிமுக உண்ணாவிரத போராட்டம்!
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி செல்லும் ஆளுநர்!
ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மழை அப்டேட்!
இன்று முதல் 28ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 160வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 -ஆகவும் விற்பனையாகிறது.
எம்பிபிஎஸ் சீட்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முதல் சுற்றில் இடங்கள் பெற்றவா்கள் விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அமைதி – மோடி வாழ்த்து!
ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று உக்ரைன் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார் பந்தயம்!
பார்முலா4 கார் பந்தய போட்டியின் முதலாவது சுற்று சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள கார்பந்தய மைதானத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் 8 அணிகளைச் சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பெண் காவல் அதிகாரிகளுக்கு குட் நியூஸ்!
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் போலீசாருக்கு 3 ஆண்டுகள் பெற்றோரோ அவரது கணவர் வீட்டை சார்ந்தவர்களோ வசிக்கும் சொந்த ஊரிலேயே பணி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பசலைக்கீரை கட்லெட்!
இந்தியன் 2 தோல்வி குறித்து ஆய்வு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வக்ஃப் போர்டு புதிய தலைவர் யார்? திமுகவுக்கா, கூட்டணிக்கா?
பொங்கலுக்கு முன் சென்னையில் புத்தக திருவிழா… பபாசி திட்டம்!