சுதந்திர தின கொண்டாட்டம்!
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் இதற்காக தங்கள் இன்னுயிரை நீர்த்தவர்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
11ஆவது முறையாக தேசிய கொடி ஏற்றும் மோடி
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுகிறார். பிரதமராக 11 வது முறையாக மோடி கொடியேற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 6,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ‘வளர்ச்சி அடைந்த பாரதம் @ 2047’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
தேசியக்கொடி ஏற்றும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். தொடர்ந்து அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி. தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தகைசால் விருது பெறும் குமரி அனந்தன்
சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனுக்கு ‛தகைசால் தமிழர்’ விருது இன்று வழங்கப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் அரசு சார்பில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 1.16 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது.
தங்கலான் ரிலீஸ் !
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
மழை அப்டேட்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 151-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’வினேஷ் போகத் மனு தள்ளுபடி’ : இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிர்ச்சி தகவல்!
நீதிபதி ஓகா போட்ட கிடுக்கிப்பிடி.., சிக்கித் திணறும் ED… செந்தில்பாலாஜிக்கு ஜாக்பாட்!
தேசிய பதவியில் இருந்து குஷ்பு திடீர் ராஜினாமா!
திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது: ஆளுநர் ரவி