டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

பிரதமர் தமிழகம் வருகை!

2 நாள் பயணமாகத் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்து வைக்கிறார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை!

வரும் 11ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ‘கோட்டை முற்றுகை போராட்டம்’ அறிவித்த நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருவதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விசிக மாநில மாநாடு!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் விசிக சார்பில் ’அரசமைப்புச் சட்டம் பாதுகாப்போம்’ என்ற பெயரில் முதல் மாநில மாநாடு இன்று மாலை 4மணியளவில் பேரணியுடன் தொடங்க உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பாஜக நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது.

முருகன் திருக்கல்யாணம்!

திருப்பரங்குன்றத்தில் இன்று தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 322வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2023!

ஐபிஎல் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளும் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளும் இன்று விளையாட உள்ளன.

இரண்டு ஆண்டுகளாக ருசிக்க முடியாமல் தவித்த பெண்!

கிச்சன் கீர்த்தனா: பஜ்ஜி மிளகாய் குருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share