டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பூடான் மன்னர் – மோடி சந்திப்பு!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இன்று (ஏப்ரல் 4) பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்திக்கிறார்.

மகாவீரர் ஜெயந்தி!

இந்தியா முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

உடன்பிறப்புகளாய் இணைவோம்!

உடன்பிறப்புகளாய் இணைவோம் புதிய உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் துவக்கி வைக்கிறார்.

தடகள போட்டி!

ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தடகள போட்டி சென்னை ஐ.சி.எஃப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

குண்டம் திருவிழா!

ஈரோடு சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெற உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 318-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கர்நாடக தேர்தல்: பாஜகவைத் திருப்பும்  எடப்பாடி- பன்னீர்

’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *