அதிமுக வழக்குகள் விசாரணை!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
திருப்பூரில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ரம்ஜான் பண்டிகை!
சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று அரபு நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புத்தக கண்காட்சி!
தூத்துக்குடியில் 4வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது.
சித்திரை தெப்பத் திருவிழா!
சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா இன்று நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை கிண்டியில் இன்று அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 335வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
திரைப்படங்கள் ரிலீஸ்!
யாத்திசை, யானை முகத்தான், தமிழரசன் ஆகிய தமிழ் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஐபிஎல் 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் இன்று சென்னை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி
அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்!