ராகுல் காந்தி மனு தீர்ப்பு!
2 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சூரத் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
அதிமுக வழக்குகள் விசாரணை!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பாஜக மையக் குழு கூட்டம்!
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மையக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இலவசக் கல்வி விண்ணப்பம்!
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பயில இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
சூரிய கிரகணம்!
400 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ’நிங்கலோ’ சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.
இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவில் தென்படும் என்றும் இந்தியாவில் இந்த நிகழ்வைக் காணமுடியாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 334வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல்,
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’கங்குவா’ படப்பிடிப்பு!
சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு இன்று கொடைக்கானலில் தொடங்க உள்ளது.
ஐபிஎல் போட்டிகள்!
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மற்றும் 28வது லீக் போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதவிருக்கின்றன.
கிச்சன் கீர்த்தனா: வரகு வெந்தயக்கீரை புலாவ்
தென்னிந்திய படங்களின் வெற்றிக்கு இதுதான் காரணம்: வெற்றிமாறன்