டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அதிமுக கருத்து கேட்பு கூட்டம்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

குருத்தோலை பவனி!

தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

பரந்தூர் விமான நிலைய போராட்டம்!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து இன்று நடைபெறவுள்ள 250-வது நாள் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் கதிரேசன் எழுதிய வேண்டாம் பரந்தூரில் புதிய விமான நிலையம் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.

மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மற்றும் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது ‌.

மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்!

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 316-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை, நியூசிலாந்து மோதல்!

இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம்: இணைப்பு பாலம்!

கிச்சன் கீர்த்தனா: தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் வரும் என்பது உண்மையா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *