ராமநாதபுரம் செல்லும் ஆளுநர்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று ராமநாதபுரம் செல்கிறார். அங்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடனும், மீனவர்களுடனும் கலந்துரையாடுகிறார்.
சமயபுரம் சித்திரை தேரோட்டம்!
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
மாமல்லபுரத்துக்கு கிளம்புங்க!
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்!
வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் “அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.
சென்னை – ஹைதராபாத் டிக்கெட் விற்பனை!
சென்னை சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடக்க உள்ள சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.
ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்!
கேரளா தொழிலதிபர் கொடுத்த மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடார் இன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தலைநகரில் பி.எஸ் 2 படக்குழு!
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 332வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 140 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஐபிஎல்: இன்றைய போட்டிகள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
முத்திரைத் தாள் விலை உயர்வு: அறிமுக நிலையிலேயே நாகை மாலி எதிர்ப்பு!
டிஜிட்டல் திண்ணை: ரஜினி, கமல், விஜயகாந்த் செய்த தவறுகள்- விஜய் ஓப்பன் டாக்!