தேசிய பஞ்சாயத்து விருது!
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஏப்ரல் 17) டெல்லியில் தேசிய பஞ்சாயத்து ஊக்குவிப்பு மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவை துவக்கி வைக்கிறார்.
தீரன் சின்னமலை பிறந்தநாள்!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்!
குஜராத் மாநிலத்தில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாணவர் சேர்க்கை!
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
விண்வெளி பணிக்குழு கூட்டம்!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஜி20 விண்வெளி பொருளாதாரம் பணிக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தங்கலான் டீசர்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் இன்று வெளியாகிறது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி!
சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலுக்கு பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 331-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் 2: விஜய் சொன்னதை நினைவு கூர்ந்த கார்த்தி
கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பைனாப்பிள் கேசரி