காங்கிரஸ் ரயில் மறியல்!
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்ரல் 15)தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மூக்கையா தேவர் பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூக்கையா தேவர் நூற்றாண்டு புகழ் வணக்க பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது.
பொன்னியின் செல்வன் Anthem!
பொன்னியின் செல்வன் படத்தின் Anthem வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று வெளியிடுகிறார்.
மீன் பிடி தடை காலம்!
தமிழகத்தில் இன்று முதல் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியது. ஜூன் 14-ஆம்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் காப்போம் பொதுக்கூட்டம்!
அம்பேத்கர் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மே17 இயக்கம் சார்பில் சென்னையில் ஜனநாயகம் காப்போம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஊட்டி சிறப்பு ரயில்!
கோடை காலத்தை முன்னிட்டு ஊட்டி சிறப்பு மலை ரயில் இன்று முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 329-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் போட்டி!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24மணி நேரத்தில் 493பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2876பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சதம் விளாசிய சன்ரைசர்ஸ் வீரர்: கொல்கத்தா அணிக்கு 229ரன்கள் இலக்கு!
சிறுபான்மையினரின் நலனுக்காக திராவிட மாடல் தொடர்ந்து செயல்படும்: முதல்வர்