எய்ம்ஸ் மருத்துவமனை!
அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
அம்பேத்கர் பிறந்தநாள்!
அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.
திமுக சொத்து பட்டியல்!
திமுக அமைச்சர்கள், எம்.பி-க்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார்.
தமிழக ராணுவ வீரர்கள் மரணம்!
பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் ராணுவ வீரர்களது உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை கொண்டு வரப்படுகிறது.
TANCET, CEETA தேர்வு முடிவு வெளியீடு!
முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான TANCET, CEETA தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
ருத்ரன் திரைப்படம் ரிலீஸ்!
கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 328-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 469 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2,684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?: அபிராமியை சாடிய லட்சுமி ராமகிருஷ்னன்
அமித் ஷாவை கிண்டல் செய்வதா? உதயநிதியைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு!