டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

முப்படை கமாண்டர்கள் மாநாடு!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் முப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

வைக்கம் நூற்றாண்டு விழா!

கேராளவில் இன்று நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கின்றனர்.

சுங்க கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் இன்று முதல் 29 சுங்கச்சாவடிகளில் கார், இலகுரக வாகனங்கள், பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.60 முதல் ரூ.240 வரை சுங்க கட்டணம் உயருகிறது.

திருவாரூர் தேரோட்டம்!

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று ஆழி தேரோட்டம் நடைபெறுகிறது.

முககவசம் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், உள் நோயாளிகள், புற நோயாளிகள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகை ஹால்மார்க் முத்திரை!

தங்க நகைகளில் HUID என்ற ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

உதகை படப்பிடிப்பு தடை!

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 1 வரை படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி!

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 315-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

IPL 2023: ரசிகர்களை வெறுப்பேற்றிய ஜியோ சினிமா

கிச்சன் கீர்த்தனா: ஆலு கோபி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel