Top ten news 13 December 2024

டாப் 10 செய்திகள்: திருவண்ணாமலை தீபம் முதல் கனமழை வரை! 

திருவண்ணாமலை தீபம்!

இன்று (டிசம்பர் 13)கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு  திருவண்ணாமலைக்கு சுமார் 50 லட்சம் பேர் வந்து செல்ல உள்ளனர்.

கனமழை!

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 விடுமுறை!

கனமழை காரணமாக இன்று நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.6,670 கோடி மதிப்பீட்டில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

சதுரகிரி செல்ல தடை!

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக இன்று முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மிஸ் யூ ரிலீஸ்!

ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள மிஸ் யூ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை!

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழையால் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி மற்றும் குதிரைவெட்டி வன ஓய்வு விடுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் பிறந்தநாள்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமானது : ஸ்டாலின்

கீர்த்தி சுரேஷ் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்

72 ஆண்டுகளில் குறைவான நாட்கள் கூடிய பேரவை : பட்டியலிட்டு ராமதாஸ் காட்டம்!

கம்பீரமான அழகியல்… வைக்கத்தில் அமைச்சர் வேலுவை பாராட்டிய ஸ்டாலின்

1.60 லட்சம் கோடியுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரிய அதிபர்… மாஸ்கோவில் உல்லாச வாழ்க்கை!

வைக்கத்தில் பெரியார் நினைவகம் திறப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts