விஜயதசமி கொண்டாட்டம்!
நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று(அக்டோபர் 11) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் அதிகரிப்பதற்கான நாளாக விஜயதசமி கருதப்படுகிறது.
திருச்சி – ஷார்ஜா விமானத்தில் கோளாறு!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தர்பங்காவுக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்!
கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்கள் தர்பங்காவுக்கு செல்ல மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ரயில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
விஜயதசமி மாணவர் சேர்க்கை!
விஜயதசமி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் தசரா!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது.
டிராகன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
இந்தியா – வங்கதேசம் மோதல்!
இந்தியா – வங்கதேசம் இடையேயான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சரத்குமார் அடுத்த படம் அறிவிப்பு!
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
பழனி முருகன் கோவில் நடையடைப்பு!
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் இன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 209-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சாமை அதிரசம்!
திருச்சி: விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய கேப்டனுக்கு ஸ்டாலின் பாராட்டு!
ஜூஸ் வியாபாரி டு பில்லியனர்… சிக்கிய மகாதேவ் செயலி உரிமையாளர்
இரு அறைகள் கொண்ட பிளாட்… மொபைல் கிடையாது… யார் இந்த ஜிம்மி டாடா?