மத்திய அமைச்சரவை கூட்டம்!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.
பெரியார் நினைவகம்!
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார்.
திமுக ஐடி விங் ஆலோசனை!
திருச்சி மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
நாகை உள்ளூர் விடுமுறை!
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி பிறந்தநாள்!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!
உலக செஸ் சாம்பியன்ஷிப் கடைசி சுற்று ஆட்டத்தில் குகேஷ் – டிங் லிரென் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் மோதல்!
இன்றைய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெல்லிக்காய் முரப்பா !
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழகத்தால் பிரிந்த மோகன் பாபு குடும்பம்!
“பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது” : மோடி பேச்சு!
திருவண்ணாமலை வழியாக செல்கிறீர்களா? : போலீஸ் முக்கிய தகவல்!
மனைவி கொடுமையால் உயிரை மாய்த்த ஐ.டி ஊழியர்… எலான் மஸ்க்கை டேக் செய்த பின்னணி!