டாப் 10 செய்திகள் : இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!

Published On:

| By Kavi

சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று (டிசம்பர் 10) நடைபெறுகிறது. இதில் பல மசோதாக்களும், கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கனமழை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். இதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருவண்ணாமலை தேரோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாரத தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அலங்கு ட்ரெய்லர்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரிப்பில், இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி வரும் அலங்கு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

குரூப்-1 முதன்மை தேர்வு!

90 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற்ற நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு இன்று தொடங்கி வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

ராஜாஜி பிறந்தநாள்!

தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த மூதறிஞர் ராஜாஜியின் 146 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ராஜாஜி சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்!

 உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பும் உரிமைகளும் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர்!

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால், வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவி ஏற்கவுள்ளார்.

டங்ஸ்டன் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட டங்ஸ்டன் ஏலம் திரும்பப் பெறும் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பருவைப் போக்க உதவுமா லேசர் சிகிச்சை?

டெல்டா மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை!

வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!

தம்பிதுரை பேசியது இதுதான்: ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு!

சஸ்பெண்ட் ஆனாலும்… உதயநிதியை விடாத ஆதவ் அர்ஜுனா

டங்ஸ்டன் சுரங்கத்தை ஆதரித்தேனா?: டெல்லியில் தம்பிதுரை பேட்டி!

சஞ்சய் மல்ஹோத்ரா: ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share