டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அண்ணா நினைவு தினம்!

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 3) திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு!

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தளபதி 67 பட தலைப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் பட தலைப்பு இன்று வெளியாகிறது.

அமமுக ஆலோசனை கூட்டம்!

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இன்று அமமுக தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் தேர்தல் பணிமனையில் வைத்து நடைபெறுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை!

கன மழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 257-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நம்ம சத்தம் பாடல் வெளியீடு!

சிலம்பரசன் நடிக்கும் பத்துதல படத்தின் நம்ம சத்தம் பாடல் இன்று வெளியாகிறது.

தெற்காசிய கால்பந்து போட்டி!

பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டி வங்கதேசத்தில் இன்று முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை ஆடிய ’காம் கேம்’- எடப்பாடிக்கு என்ன சின்னம்?

அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்திற்குக் காந்தி பெயர்: மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *