இந்திய எரிசக்தி வாரம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று(பிப்ரவரி 6) இந்திய எரிசக்தி வாரம்2023 பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
பயிர் சேதம் அறிக்கை!
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து அமைச்சர் குழு மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் தேர்வு கடிதம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேர்வு ஒப்புதல்கடிதம் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடியால் இந்திய பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக இந்தியா முழுவதும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
நலத்திட்ட உதவிகள் விழா!
மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
விசிக ஆர்ப்பாட்டம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவியரசன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் இன்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை!
தக்கலை செய்கு பீர் முகம்மது ஸாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலம் தயாரிப்பு அப்டேட்!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 261-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்: இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர்!
எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்: ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!