பணி நியமன ஆணை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும், காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 7) வழங்குகிறார்.
நீதிபதிகள் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
விக்டோரியா கவுரி வழக்கு!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக வேட்புமனு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ரோஜா நாள்!
பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் ரோஜா நாள் கொண்டாடப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் நிறைவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 262-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.
நீட் ரகசியத்தை சொல்லுங்கள் உதயநிதி: முன்னாள் அமைச்சர் கேள்வி!
குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!